புதிய உச்சத்தில் #GoldRate | பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.7,375க்கும், சவரன் ரூ.59,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் தீபாவளி நெருங்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதனிடையே, சென்னையில் நேற்று ( அக்.28ம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து, சவரனுக்கு ரூ.58,520க்கும், ஒரு கிராம் ரூ.7,315 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (அக்.29ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000 க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலையால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : Kerala | கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து – 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்… 8 பேர் கவலைக்கிடம்!
இதனிடையே, வெள்ளி விலையில் ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனையான நிலையில், கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.