மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கும், சவரன் ரூ.55,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. ஆனால் கடந்த செப்டம்பரில் நாளுக்கு நாள் அதிகரித்த தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இப்படியே சென்றால் ஒரு கிராமாவது வாங்க இயலுமா என மக்கள் எண்ணிய நிலையில், எந்த அளவுக்கு உயர்ந்ததோ அதே அளவிற்கு இம்மாதத் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது.
இதையும் படியுங்கள் : பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி - முதல் போட்டியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அறிவிப்பு!
சென்னையில் நேற்றுமுன் தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 55,480 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 6,995க்கும், சவரனுக்கு ரூ. 480க்கும் உயர்ந்து ரூ.55,960 க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.