For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பார்முலா 4 கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது - தமிழ்நாடு அரசு விளக்கம்!

01:22 PM Nov 29, 2023 IST | Web Editor
பார்முலா 4 கார் பந்தயத்தால் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது   தமிழ்நாடு அரசு விளக்கம்
Advertisement

பார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.  மேலும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது  என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில்  பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும்,  பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீஹரிஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத் வாதிட்டதாவது:

இந்த கார் பந்தயத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான இடத்தில் நடத்துவதால் பெரிய அளவில் அசவுகரியம் ஏற்படும்,  பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை,  ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன.  சுமார் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும் போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என்றார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மறுப்பு தெரிவித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

இந்த பந்தயம் ஏற்கனவே நொய்டா,  ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.  இது போன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும்.  மேலும்,  மனுதாரர் கூறுவது போல் ஒலி மாசு அதிகம் இருக்காது.  கார்களின் சத்தத்தை கட்டுப்படுத்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படும்.  அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு,  வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அறிவித்தார்.

Tags :
Advertisement