For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு...கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் மேலும் சில ரயில்கள் ரத்து!

10:00 AM Aug 02, 2024 IST | Web Editor
மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு   கடற்கரை தாம்பரம் வழித்தடத்தில் மேலும் சில ரயில்கள் ரத்து
Advertisement

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையில் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

Advertisement

இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 9.20 முதல் பகல் 1.30 வரையும், இரவு 10.30 முதல் அதிகாலை 2.45 மணி வரையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக தாம்பரத்தில் இருந்து காலை 7.17, 8.19 , 9.22, 9.40, 9.50 மணிக்கும், மாலை 6.26, 7.15 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படும்.

முன்னதாக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே 20 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடற்கரையிலிருந்து காலை 9.30 முதல் பகல் 12.45 மணி வரையும், மறுமாா்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.17 முதல் பிற்பகல் 1.42 மணி வரையும் 15 நிமிஷங்களுக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இதையும் படியுங்கள் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா – சுவாமி தங்க வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா!

மேலும் இரவு 10.40, 11.05, 11.30, 11.59 மணிக்கும், மறுமாா்க்கமாக பல்லாவரத்திலிருந்து இரவு 11.30, 11.55 மணிக்கும் கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 8.26 மற்றும் காலை 8.39 மணிக்கு புறப்படும் பெண்கள் சிறப்பு மின்சார ரயில் பொது ரயிலாக இயக்கப்படும்.

ஆவடி ரயில்: சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து இரவு 11.40, 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்களும், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ஆகஸ்ட் 2ம் தேதி மற்றும் 4ம் தேதி ரத்து செய்யப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராமுக்கு அதிகாலை 3 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகஸ்ட் 3ம் தேதி மற்றும் 5ம் தேதி ரத்து செய்யப்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement