Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் - 35 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

01:04 PM Jan 31, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. 

Advertisement

இன்றைய சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய தீர்மானங்களின் விவரம் ;

1. பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய கணக்கு குழுமம், 2022 - 2023 ஆம் ஆண்டு தற்காலிக ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிக ஊதியம் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்த மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதில் வழங்கப்படும் மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியத்தால் மாநகராட்சிக்கு 2023 -24 ஆம் ஆண்டுக்கு நிதியாண்டில் ஏற்படும் கூடுதல் செலவினமாக மூன்று கோடியே 70 லட்சம் ரூபாயாக கணக்கிடப்படுகிறது. மொத்தம் 7970 பணியாளர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.

2. சென்னை மாநகராட்சி மண்டலம் 2,  ஒன்று முதல் 15 வரை உள்ள (NULM) தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் பணி புரியக்கூடிய பணியாளர்களுக்கு 522 ரூபாயிலிருந்து நாள் ஊதியம் 687 ஆக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி ஒன்று முதல் 15 மண்டலத்தில் 4469 பேர் பணிபுரிந்து வருவதாகவும் தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

3. சென்னை மாநகராட்சியின் 11வது வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளின் சுற்றுப்புறம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய 110 பணியாளர்களை தற்காலிகமாக தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பணியமர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

4. சென்னை மாநகராட்சி சார்பில் உள்ள டென்னிஸ் , பூப்பந்து , டேபிள் டென்னிஸ் ,மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல்களை பராமரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில், ஆன்லைன் E-டெண்டர் முறையில் ஒப்பந்தம் கூறுவதற்கு 32 டென்னிஸ் திரள்கள், 23 பூப்பந்து திடல்கள், 18 ஸ்கேட்டிங் திடல்கள் மற்றும் இரண்டு டேபிள் டென்னிஸ்களுக்கு மாமன்ற தீர்மானம் பெறப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட திடல்களுக்கு நிர்வாக அனுமதியும் மற்றும் மன்றத்தின் அனுமதி பெற்று வரையறுக்கப்பட்ட மின்னணு ஒப்பந்த முறையில் ஒப்பந்தம் கோருவதற்கும் அனுமதி தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இவற்றோடு மேலும் மொத்தமாக 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

Tags :
Chennai corporationCouncil MeetingDMKMayor PriyaMK StalinNews7Tamilnews7TamilUpdatestamil nadu
Advertisement
Next Article