வீடு கட்டி தருவதாக ரூ.43 லட்சம் மோசடி | 2 பேர் கைது!
தேமுதிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி ரூ. 43 கோடி மோசடி செய்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சந்தோஷ் சர்மா என்பவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “மின்சார வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது!” – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்!
இங்கு 78 வீடுகளை மறைந்த நடிகர் விஜயகாந்தின் உறவினர் சுதிஷின் மனைவி பூர்ண ஜோதி என்பவரும் பல கோடி கொடுத்து சந்தோஷ் சர்மாவிடம் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. இதையடுத்து, சுதிஷின் என்பவர் தேமுதிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல் 48 வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று 43 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக பூர்ணஜோதி தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.