For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ‘அம்மா உணவகங்கள்’ - மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

11:17 AM Jun 14, 2024 IST | Web Editor
ரூ 5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ‘அம்மா உணவகங்கள்’    மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது.  அப்போது 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது  “அம்மா உணவகம்”.  அதிமுக ஆட்சியிலும்,  கொரோனா,  புயல்,  வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தன.  இதனிடையே 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

இந்நிலையில்,  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்,  முன்னதாக செயல்பட்டு வந்த அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.  ஆனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களை தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால்,  2016ம் ஆண்டு,  வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது.  பொது மக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால் 2016ம் ஆண்டு வார்டுக்கு இரண்டு வீதம்,  407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது.
நீதிமன்ற வழக்கு,  மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட காரணங்களால் 16 உணவகங்கள் மூடப்பட்டன.

தற்போது, 391 உணவகங்கள் கடந்த 11 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன.  இங்கு, இட்லி ஒரு ரூபாய்,  பொங்கல்,  சாம்பார்,  லெமன்,  கருவேப்பிலை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்,  2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  குறைந்த விலையில் கிடைப்பதால், கூலி தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைகின்றனர்.

இவற்றில் தினமும் ரூ. 5 லட்சம் வீதம்,  ஆண்டுக்கு, ரூ. 20 கோடி கிடைக்கிறது.  ஆனால், குறைந்த விலைக்கு உணவுகளை வழங்குவதால் ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவாகிறது.  ஆண்டுதோறும், 120 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுகிறது.  நஷ்டத்தை ஈடுசெய்ய,  எந்தவித புது திட்டமும் அறிமுகப்படுத்தவில்லை.  உணவகத்தின் சுவை ஒரே விதமாக இருப்பதால்,  சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

உணவு தயாரிப்பு பொருட்களை கையாளுவதில் முறைகேடு நடப்பதாகவும்,  இட்லி, சப்பாத்தி ஆகியவற்றை தெருவோர கடைகள், 'டாஸ்மாக்' மதுக்கூடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.  நஷ்டத்தை காரணம் காட்டி, அம்மா உணவகங்களை படிப்படியாக மூட முடிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  நஷ்டத்தை ஈடுசெய்ய, ' நமக்கு நாமே திட்டம்' வாயிலாக,  தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

அதே போல,  சாப்பாட்டின் வகைகளை மாற்றி,  ருசியாக வழங்கினால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பரிந்துரைக்கப்பட்டது . இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  அனைத்து அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து,  வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், உணவகங்களின் சமையலறையில் பிரிஜ்,  கிரைண்டர்,  மிக்ஸி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள்,  சமையலறை பொருட்களை மாற்றவும், மண்டல அதிகாரிகளுக்கு, மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

வரும் காலங்களில்,  அம்மா உணவகம் தொடர்பாக புகார் வந்து,  மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் இல்லை.  அம்மா உணவகங்கள் பல, மோசமான நிலையில் உள்ளன.  குடிநீர் வருவதில்லை,  கூரை சேதம்,  சமையல் பொருட்கள் பழுது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன.  கவுன்சிலர்கள்,  நிலைக்குழு கூட்டங்கள் வாயிலாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதிகாரிகள் நடத்திய ஆய்வில்,  ஆரம்பத்தில் அம்மா உணவகங்களுக்கு வந்த பயனாளிகள்,  இப்போது வருவதில்லை என்பதும் தெரிந்தது.  இதனால், அனைத்து அம்மா உணவகங்களையும் சீரமைத்து புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் வருகையை அதிகரிக்க,  ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement