For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai | விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி - முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு!

11:59 AM Oct 06, 2024 IST | Web Editor
 chennai   விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி   முதலமைச்சர்  துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு
Advertisement

சென்னை விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

Advertisement

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்.8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து, 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று (அக். 6) மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இதை இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் மெரினாவில் குவிந்துள்ளனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, டிஆர்பி ராஜா, தயாநிதி மாறன் எம்பி, சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றன. வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைக்கும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தி வருகின்றன.

Advertisement