Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை: கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

09:53 PM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

ஆழ்வார்பேட்டையில் விடுதி முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மேட் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கூறை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.  இது குறித்து விசாரணை அபிராம்புரம் போலீசார் நடந்தி வருகிறது.  மரணம் அடைந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் இருவர் மணிப்பூரை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவரின் பெயர் சைக்ளோன்ராஜ். இவருக்கு வயது 45.

மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (23), லாலி (22) ஆகியோரும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  உயிரிழந்த இந்த 3 பேரை தவிர கிளப்பில் வேறு யாரும் இல்லை என காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது.

மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்த விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மாநில பேரிடர் மீட்பு பணிகள் குழு சென்றுள்ளது. மீட்பு பணிகளுக்காக 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சென்றுள்ளனர். சம்ப இடத்தை மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வேலு பார்வையிட்டார்.

Tags :
Accidentbuilding collapseChennai
Advertisement
Next Article