சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது... மின்விளக்குகளால் ஜொலிக்கும் குற்றாலம்!
சாரல் திருவிழா இன்று தொடங்க உள்ள நிலையில் குற்றால அருவிகள் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றாலத்தில்
ஆண்டு தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மழைக்கால சீசன் களைகட்டுவது
வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் குவிவார்கள். அந்த வகையில் மழைக்கால சீசன் தொடங்கிய நிலையில், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிக்கு வருகை தந்து அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சீசன் காலகட்டங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான சாரல் திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளளது. சாரல் திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சாரல் திருவிழாவில் பல்வேறு பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த சூழலில் சாரல் திருவிழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றால மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் கண்கவர் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன. இவை பார்ப்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது.