சென்னை சென்ட்ரல் -ஆவடி இடையேயான #SubUrban ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை சென்ட்ரல் -ஆவடி இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள், ரயில் பாதை பராமரிப்பு, பொறியியல் பணி காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும். அப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில் பகுதியாக அல்லது முழுமையாக ரத்து செய்யப்படும். அந்த வகையில், ஆவடி ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி நாளை, நாளை மறுநாள் மற்றும் செப்.27 ஆகிய தேதிகளில், ஆவடி வழித்தடத்தில் இயக்கக்கூடிய புறநகர் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.
முழுநேரமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லக்கூடிய புறநகர் ரயிலானது (இரயில் எண் 43001) செப்.25, 26, 27 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேரம் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
பட்டாபிராமில் இருந்து இரவு 10.45க்கு மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில் (ரயில் எண் 43128) இன்று முதல் வரும் 27- ஆம் தேதி வரை பட்டாபிராம் ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 43102
பட்டாபிராம் மிலிட்டரி சைட்டிங் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட் வரை செல்லக்கூடிய அதிகாலை 3.30 மணி புறநகர் ரயில் நாளை, நாளை மறுநாள் மற்றும் செப்.27 ஆகிய தேதிகளில் பட்டாபிராம் ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு ஏற்றவாறு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை மேற்கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.