Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்! வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட நாளை செல்வதாக அறிவிப்பு!

05:10 PM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார். 

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அங்கு செல்ல இருந்த நிலையில், அந்த பயணத்தை மாற்றி அமைத்து நாளை காலை 10.15மணிக்கு நேரடியாக தூத்துக்குடி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள மக்களை நேரில் சந்திக்க உள்ளார். அங்கு சென்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், மீட்பு பணிகளையும் பற்றி ஆய்வு செய்ய உள்ளார்.

இதையும் படியுங்கள் : விசித்ராவை சிங்கப்பெண்ணே எனப் பாராட்டி பதிவிட்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி!

 ஆய்வு மேற்கொண்ட பின் நாளை இரவு 10:40 மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். 

Tags :
cancelCMOTamilNaduMaduraiMKStalinNellaithuthukudiVisit
Advertisement
Next Article