"சந்திராயன் 4 திட்டம் வெற்றிக்கரமாக அமையும்" - இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஜுலை 30ம் தேதி இஸ்ரோவும், நாசாவும் இணைந்து உருவாக்கிய புவி கண்காணிப்பு செயற்கோள், இந்தியாவில் தயாரித்த ஜி எஸ் எல் வி- எப் 16 ராக்கெட் முலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. 740 கிலோ மீட்டர் தூரத்தில் விடப்படும்.
இந்த செயற்கோள் முக்கியமானது. அதி நவீன ரேடார் ஆகும். மேகம், மழை இருந்தாலும் 24 மணி நேரமும் பூமியை புகைப்படம் எடுக்க முடியும். இந்த செய்ற்கோள் முலம் நிலச்சரிவு, பேரிடர் மேலாண்மை, பருவ நிலை மாற்றங்களை கண்டுபிடிக்க் முடியும். பூமியை முழுமையாக புகைப்படம் எடுக்க முடியும். இந்தியா, அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகத்தில் உள்ள குளோபல் கம்யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் பயன்பெற கூடிய செயற்கோள் ஆகும்.
ஆதித்யா எல் 1 செயற்கோள் கடந்த ஜனவரி 26ந் தேதி பூமியில் இருந்து 1.5 கிலோ கொண்டு விடப்பட்டது. வரும் ஜனவரி 26ம் தேதி ஹை ஹராடிக் டேட்டா அறிவியல் டேட்டா சூரியனை ஆராய்ச்சி செய்த டேட்டாக்க்ள் வந்து உள்ளன. இந்த டேட்டாக்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, வட மாநிலங்கள் என தனித்தனியாக செய்யபப்டவில்லை. நாட்டில் உள்ள மக்களுக்கு என்ன தேவையோ அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மனிதனை வின்வெளிக்கு ஆள் இல்லாமல் 3 மிஷன்கள் அனுப்ப வேண்டும். இதில் முதல் வாகனம் ஶ்ரீ ஹரிகோட்டாவில் தயாராகி கொண்டு இருக்கிறது. இந்த வருடம் டிசம்பர் மாதம் ஆட்களுக்கு பதிலாக ஆள் இருப்பது போல் அனுப்ப உள்ளோம். இதில் வெற்றி அடைந்தால் அடுத்த ஆண்டு 2 மிஷினக்ளை ராக்கெட் அனுப்பப்படும். பிரதமர் அறிவித்த படி 2027ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆட்கள் உள்ள ராக்கெட் அணுப்பப்படும்.
சந்திராயன் 4 செயற்கைகோள் நிலாவில் இறங்கி மாதிரிகளை கொண்டு வரும் திட்டமாகும். இந்த திட்டம் வெற்றிக்கரமாக நடக்கும். சந்திராயன் 5 திட்டம் இந்தியா- ஜப்பான் இணைந்து செய்ய கூடியது. இது 100 நாள் செயல்பட கூடியது. 55 செயற்கோள்கள் நமக்காக பயன்பட்டு கொண்டு இருக்கிறது. 4 ஆண்டுகளில் இவற்றை 3 பங்காக மாற்றிட செயலாற்றி கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.