Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சந்திரயான் 4 திட்டம் - #UnionCabinet ஒப்புதல்!

04:52 PM Sep 18, 2024 IST | Web Editor
Advertisement

இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இக்கூட்டத்தில் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவித்தார். இதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 'சந்திரயான்-4' திட்டத்தின் மூலம் இந்தியா மீண்டும் நிலவுக்கு செல்ல இருப்பதாகவும், இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி, 'சந்திரயான்-3' திட்டத்தின் கீழ் 'விக்ரம்' லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

அதன் தொடர்ச்சியாக 'சந்திரயான்-4' விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி அங்கிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல் ரூ.20,193 கோடி செலவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்திரயான்-4' திட்டத்தின் நீட்சியாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான ஆர்பிட்டர் மிஷன் திட்டத்தை ரூ.1,236 கோடியில் செயல்படுத்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் விண்கலம் 2028 மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவின் சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் திட்டத்தின்படி, சர்வதேச விண்வெளி மையத்தின் முதற்கட்ட அலகுகளை கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
approvesChandrayan 4ISROsateliteUnion Cabinet
Advertisement
Next Article