For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chandrayaan3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

11:42 AM Aug 15, 2024 IST | Web Editor
 chandrayaan3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement

இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தினவிழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். முப்படை அதிகாரிகள், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். பின்னர் திறந்த ஜீப்பில் காவல்துறையின் அலங்கார அணிவகுப்பை பார்வையிட்டார்.

தொடர்ந்து நாட்டின் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் தகைசால் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தகைசால் விருது மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

Tags :
Advertisement