Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து மகள் கவிதாவை நீக்கினார் சந்தரசேகர் ராவ்!

மூத்த தலைவர்களை தவறாக விமர்சித்தாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து மகள் கவிதாவை நீக்குவதாக சந்தரசேகர் ராவ் அறிவித்துள்ளர்!
03:53 PM Sep 02, 2025 IST | Web Editor
மூத்த தலைவர்களை தவறாக விமர்சித்தாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்து மகள் கவிதாவை நீக்குவதாக சந்தரசேகர் ராவ் அறிவித்துள்ளர்!
Advertisement

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் கே. கவிதாவை இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

Advertisement

பிஆர்எஸ் கட்சியின் கடந்த ஆட்சியின் போது கட்டப்பட்ட காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை நேற்று தெலுங்கானா காங்கிரஸ் அரசு சிபிஐயிடம் ஒப்படைத்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கானா சட்டமேலவை உறுப்பினரும், பி.ஆர்.எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா நேற்று செய்தியாளர் சந்திப்பில், பிஆர்எஸ் ஆட்சியில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ், முறைகேடுகள் மூலமாக சொத்துகள் குவித்தாகவும், தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சந்திரசேகர் ராவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பிஆர்எஸ் மூத்த நிர்வாகியுமான சந்தோஷ் குமாரும் தனது தந்தைக்கு எதிராக செயல்படுவதாக கவிதா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கே. கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதாக கூறி அவரை கட்சியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

 

Tags :
BRSchanderasekherrsokavithalatestNews
Advertisement
Next Article