Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024 மக்களவை பொதுத்தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு!

11:17 AM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement

2024 மக்களவை பொதுத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளன.  கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து, தொகுதி பங்கீடு,  வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.  ஆளும் கட்சியான பாஜக 2 கட்டமாக 267 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் 2 கட்டமாக 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்களை வெளியிட்டுள்ளது.  இதே போன்று இந்திய கம்யூனிஸ்ட்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் மற்றும் ராஜிநாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஆகியோர் பதவிகளுக்கு  நேற்று புதிதாக 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.  இதன்படி,  புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார்,  சுக்விர் சிங் சாந்து ஆகியோர் இன்று காலை பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று மாலை 2024 பொதுத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
election commisionELECTION COMMISSION OF INDIAElection CommissionersElection DateElections2024Lok sabha Election 2024news7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article