தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை குறித்து வானிலை மையம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 16-ஆம் தேதி நிலவக்கூடும்.
இதையும் படியுங்கள்:வடகிழக்கு பருவமழை தீவிரம்… தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம்gival அதிகரிப்பு…
மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.14)அதிக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனை தொடர்ந்து விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி செவ்வாய்மகிழமை அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். அதனால் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணத்தில் முகாம் பலத்த மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 12 செ.மீ.முதல் 20 செ.மீ. வரை கன மற்றும் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய மட்புக் குழுவும், தமிழக அரசின
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும் எடுத்துள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் முகாமிட்டுள்ளன.
இதேபோல, தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த பத்து குழுக்கள் அரக்கோணத்தில் முகாமிட்டுள்ளன. இந்த குழுக்களைச் சேர்ந்த 250 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தேவைக்கேற்பே அந்தந்த மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பிவைக்கப்படும் என்று மீட்பு குழு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.