தமிழக மக்களே உஷார்...12 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!
04:16 PM Oct 31, 2023 IST
|
Web Editor
Advertisement
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து பல்வேறு பகுதிகளிலும் கனமழை
பெய்து வரக்கூடிய நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 43 சதவீதம் மழை குறைவு கடந்த 123 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரையில் ஒரு மாவட்டத்தில் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக அதிக அளவிலும் ஆறு மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பு விட குறைவாகவும் 17 மாவட்டங்களில் இயல்பு விட மிகக் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவி
வருகிறது.இதன் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால்
பகுதியில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கூறினார்.
Next Article