12மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : "கங்கனா விவகாரத்தில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பயங்கரவாதிகள் என சொல்வது தவறு" - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி
மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை தேனி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய முதல் மிதமான முதல் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.