அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
5 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக சென்னை,தூத்துக்குடி,தஞ்சாவூர் போன்ற பல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. பல மாவட்டத்தில் வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. மழை நீர் தாழ்வான பகுதிகளை சூழ்ந்தது.விடமால் பெய்து வரும் மழையால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டனர்.
இன்னும் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்க்கு மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மண்டலம் தெரிவித்து உள்ளனர். அதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தியுள்ளார்.