தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்றே வலுவடையக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் காரணமாக வரும் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஃபெஞ்சலை தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக அவ்வளவாக தமிழ்நாட்டில் மழை இல்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.