அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இது அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் முன்னதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! - அமைச்சர் முத்துசாமி பேட்டி
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.