Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

09:20 PM Apr 17, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6  மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்ப நிலை 36-37 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
Rainrain alertWeatherWeather Updates
Advertisement
Next Article