மதியம் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (மாா்ச் 3) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டி தீர்த்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராமநாதபுரம்
புதுக்கோட்டை