Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” - சென்னை வானிலை ஆய்வு மையம்!

07:57 PM May 01, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

 

கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான ஈரோட்டில் வெயில் 107டிகிரியை கடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடை வெயிலின் காரணமாக முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளளவு குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், விருதுநகர், சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :
Meteorological CentreNews7Tamilnews7TamilUpdatesRainTemperatureWeather Update
Advertisement
Next Article