For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

08:40 AM Dec 11, 2023 IST | Web Editor
தமிழ்நாட்டின் 4  மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு  எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்து 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி,  தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: “இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்க ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டும்” – முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர்!

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags :
Advertisement