அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்பர் 4-ம் தேதி சென்னை – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், டிச. 5 -ம் தேதி ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ஆஸி.க்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி - தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்..!
விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், திருப்பத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.