Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

07:18 AM Dec 19, 2023 IST | Web Editor
Advertisement

அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த 3 மணிநேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Meteorological DepartmentNews7Tamilnews7TamilUpdatesRainWeather Updates
Advertisement
Next Article