அடுத்த 2மணி நேரத்தில் 10மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - 3மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, இன்றைய தினம் (நவம்பர் 19) மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ளார்.
இதேபோல நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தஞ்சையில் மழையின் தாக்கத்தை பொருத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம எனவும் ஆட்சியர் ஆர்.பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.