காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு... லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.5) கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் | இறுதி வரை போராடிய மும்பை… லக்னோ அணி திரில் வெற்றி!
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.10ம் தேதி லேசானது முதல் மிதமான மழை தொடரும் எனவும் தெரிவித்தது. இதேபோல், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.