For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
05:19 PM Jun 20, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement