Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!

08:13 AM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் இன்று புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நாளை (டிச. 4) மற்றும் நாளை மறுநாள்(டிச. 5) மிக கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 5-ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Chennai rainsCycloneCyclone MichaungHeavy rainfallMichaungNews7Tamilnews7TamilUpdatesRainrain alertTn RainsWeather Update
Advertisement
Next Article