Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

08:20 AM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  குற்றால அருவிகளில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!…

இதனால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் 28-ம் தேதிக்கு முன்பாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் டிசம்பர் 1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றுஅடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :
News7Tamilnews7TamilUpdatesRainTamilNaduWeatherWeatherUpdate
Advertisement
Next Article