தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவ.19-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதன்கிழமை 9 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருந்த புயல் சின்னம் இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வியாழக்கிழமை (நவ. 16) ஒடிஸா கடற்கரைக்கு நகரும். இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும்.
இதையும் படியுங்கள்: மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை கொட்டியது. இதனிடையே கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.