அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் நிலவி வருகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : தீபாவளி என்றாலே ஸ்வீட் தான்... - மாறும் காலம்..! மாறாத மரபு..!
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.