Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

03:23 PM Oct 25, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வருகிற அக்டோபர் 29ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

ஹாமூன் புயல் நேற்று காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயல் நிலவியது. இப்புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுவிழந்தது.  இதனைத் தொடர்ந்து இன்று 1.30-2.30 மணியளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங்க்கு அருகில் கடந்தது.

வடக்கு மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர்  31 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன் படி அக்.29-ம் தேதி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Metrological DepartmentRainrain alertTN Rain AlertWhetherwhether update
Advertisement
Next Article