Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரை, தேனி, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

01:48 PM May 24, 2024 IST | Web Editor
Advertisement

கோவை, தேனி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடலில் வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேபுபரா (வங்களதேசம்) க்கு சுமார் 800 கிமீ தொலைவிலும், தென்- தென்மேற்கு மற்றும் கேனிங்கிற்கு (மேற்கு வங்கம்) தெற்கே 810 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து, அது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும்.

தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, மே 26 ஆம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் தீவிரப்புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி,  கோவை,  திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகை, தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags :
Cycloneheavy rainsNews7Tamilnews7TamilUpdatesRain UpdatesrainsTamilNaduWeather
Advertisement
Next Article