தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு! -வானிலை ஆய்வு மையம் தகவல்...
இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி மேற்கு திசை காற்று வீசி வருவதை அடுத்து இன்று முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழையும், ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரியில் இன்று முதல் 12 ஆம் தேதி நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மற்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கடலோர பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எனவே இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை கோடம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம்,, தேனாம்பேட்டை, அண்ணா நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.
அதேபோல் எம்ஜிஆர், நகர் சென்னை ஆட்சியர் அலுவலகம், நுங்கம்பாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதை அடுத்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.