For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாம்பியன்ஸ் டிராபி | இந்தியாவுடன் மோதப் போவது யார்? அரையிறுதியில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
10:59 AM Mar 05, 2025 IST | Web Editor
சாம்பியன்ஸ் டிராபி   இந்தியாவுடன் மோதப் போவது யார்  அரையிறுதியில்  நியூசிலாந்து   தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
Advertisement

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரைஇறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

Advertisement

லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி, வரும் 9ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதும். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டியில் நுழைவதற்காக இரு அணிகளும் தீவிரம் காட்டும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைய போகும் அணி எது? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 26-ல் நியூசிலாந்தும், 42-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் மோதி உள்ள இரு ஆட்டங்களில் தலா ஒன்றில் வெற்றி கண்டுள்ளன.

Tags :
Advertisement