சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி!
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. இத்தொடரில் 8 அணிகள் விளையாடி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகின்றன.
தொடரில் நாளை லாகூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் விக்கெட் கீப்பராக ஜேமி ஸ்மித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பில் சால்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுவார் என தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி :
பில் சால்ட், பென் டக்கட், ஜேமி ஸ்மித்(விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா அர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.