சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் : பாகிஸ்தான் வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று பாகிஸ்தான் சென்றடைந்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கடாஃபி மைதானத்தில் அவர்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளனர். பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடவுள்ளனர்.