Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்பியன்ஸ் ட்ராபி | டாஸ் வென்றது பாகிஸ்தான்... இந்திய அணி முதலில் பவுலிங்!

சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
02:38 PM Feb 23, 2025 IST | Web Editor
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தானில் கடந்த பிப்.19ம் தேதி தொடங்கியது. இந்த போட்டி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.

Advertisement

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. அதன்படி, மும்பையில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில்  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி வாகைசூடும் எண்ணத்தில் களமிறங்கியுள்ளனர். இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்த்து வருகின்றனர்.

அணிகளின் விவரம்: 

இந்தியா 

ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி

பாகிஸ்தான்

இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான்(கே, வி.கீ), சல்மான் அலி ஆகா, சவுத் ஷகீல், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது

Tags :
Champions TrophyCricketIND VS PAKIndianews7 tamilNews7 Tamil UpdatesPak vs IndpakistanSportsSports Update
Advertisement
Next Article