For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாம்பியன்ஸ் டிராபி : இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-ஆவது போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.
08:37 AM Feb 20, 2025 IST | Web Editor
சாம்பியன்ஸ் டிராபி   இந்தியா   வங்கதேசம் இன்று மோதல்
Advertisement

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மோதின. இதில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

Advertisement

தொடர்ந்து இன்று நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சகரவர்த்தி.

வங்கேதசம்:
நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), சௌம்யா சர்க்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிருதய், முஷ்பிகர் ரஹீம், எம்.டி. மஹ்மூத் உல்லா, ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹுசைன் எமோன், நசும் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், நஹித் ராணா.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா, வங்கதேசம் இதுவரை 41 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கும் நிலையில், இந்தியா 32 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. வங்கதேசம் 8-இல் வென்றிருக்க, ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

Tags :
Advertisement