பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் CEO திடீர் ராஜிநாமா! ஏன் தெரியுமா?
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக சுரீந்தர் சாவ்லா அறிவித்துள்ளார்.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. பேடிஎம்-ன் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேசன் லிமிடெட் மற்றும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது. இதை தொடர்ந்து பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயனாளர்கள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுவதாக சுரீந்தர் சாவ்லா அறிவித்துள்ளார். இது தொடர்பாக One 9 கம்யூனிகேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் ”பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சுரீந்தர் சாவ்லா தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிறந்த தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏப்ரல் 8, 2024 அன்று ராஜிநாமா செய்தார்.
ஜூன் 26 ம் தேதியில் இருந்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேடிஎம் பேமன்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சுரிந்தர் சாவ்லா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.