Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CenturyOfExcellence | 100வது ஆண்டில் Hockey India!

07:39 PM Nov 07, 2024 IST | Web Editor
Advertisement

ஹாக்கி இந்தியாவின் 100வது ஆண்டினை முன்னிட்டு சிறப்புப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 99 ஆண்டுகளில் ஈடுஇணையற்ற சாதனைகளை ஹாக்கி இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு நவ.7, 1925-ம் ஆண்டு ஹாக்கி இந்தியா என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களும், 4 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளன. இயற்கையான ஆடுகளத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடுகளத்தில்வரை ஹாக்கி இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஹாக்கி இந்தியா புத்துயிர்ப்பு அடைந்துள்ளது. ஹாக்கியில் ஆடவர் அணி கடந்த 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஹாக்கி இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் 4ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி இந்தியா லீக் மீண்டும் நடைபெறவிருக்கிறது. 2013இல் தொடக்கிய இந்த லீக் 2017 உடன் நடைபெறாமல் இருந்தது. தற்போது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது மீண்டும் தொடங்கவிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பல சர்வதேச போட்டிகளை ஹாக்கி இந்தியா சிறப்பாக நடத்தியிருக்கிறது. உலக தரமான ஆடுகளத்தை இந்தியா முழுவதும் நிறுவியிருக்கிறது.

ஆன்லைனில் வீரர்கள் குறித்த பதிவு முறை, தேசிய வீரர்கள் குறித்த தரவுகள், மெம்பர் யுனிட் போர்டல் என டிஜிட்டல் புதுமையை புகுத்தியுள்ளது. ஹாக்கி இந்தியா பாலின சமத்துவத்தை விரும்புகிறது. ஆடவருக்கு என்ன பரிசுத்தொகையோ அதேயளவு பெண்களுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் டர்கி கூறியதாவது, “100ஆவது ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ஹாக்கி இந்தியா ஆடவருக்கான ஹாக்கி லீக்கினையும் மீண்டும் துவங்குகிறது. மேலும் பெண்களுக்கான ஹாக்கி லீக்கினையும் தொடங்குகிறது. இவ்வளவு நீண்ட மறக்கமுடியாத பயணத்தையும் தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக உருவான லெகசியை (விருப்புரிமைக்கொடை) வெளிக்காட்டும் விதமாகவும் இந்த வெற்றிக் கொண்டாடப்படுகிறது” என்றார்.

Tags :
100 Years of HockeyCenturyhockeyHockey IndiaHockey India LeagueIndiaIndia SportsNews7TamilSAI
Advertisement
Next Article