Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ள பாதிப்பை பார்வையிட மத்திய குழு சென்னை வருகை - 4 மாவட்டங்களில் இன்று ஆய்வு..!

06:42 AM Dec 12, 2023 IST | Jeni
Advertisement

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வற்காக டெல்லியில் இருந்து மத்திய குழு நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இதனிடையே புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்தார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள் : உலகமே இந்திய இளைஞர்களை உற்று நோக்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி உரை!

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு, டெல்லியில் இருந்து நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த குழு இன்று 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய உள்ளது.

Tags :
CentralTeamChennaiCycloneHeavyRaininspectionMichaung
Advertisement
Next Article