Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு - புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!

12:34 PM Dec 14, 2023 IST | Jeni
Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தடைந்தது.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா,  மத்திய குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து,  கடந்த இரண்டு நாட்களாக 4 மாவட்டங்களிலும் மத்திய குழு ஆய்வு செய்தது.  இரண்டு குழுக்களாகப் பிரிந்து பாதிப்புக்கு உள்ளான சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

இந்நிலையில்,  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது,  வரலாறு காணாத பெருமழையால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை சரி செய்து மீண்டு உருவாக்கவும்,  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதை மீண்டும் உருவாக்கி வழங்கவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் போதுமானது அல்ல என்றும்,  மத்திய அரசின் பங்கு தேவைப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ அமைப்பதா? - இபிஎஸ் கண்டனம்

மேலும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு தேவையான உதவி வழங்கவும்,  பல்வேறு வகையான சமூக கட்டனைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் மத்திய அரசுக்கு உரிய பரிந்துரையை செய்து,  தமிழ்நாடு அரசு கோரிய தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து,  மத்திய குழுவினர் டெல்லி சென்று மத்திய அரசிடம் வெள்ள பாதிப்பு தொடர்பான ஆய்வறிக்கையை இன்னும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
CENTRALCMOTamilNaduCycloneMichaungMKStalinteamTNGovt
Advertisement
Next Article