Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு ஒப்புதல் " - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

10:37 AM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

Advertisement

6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் தலைவரும் சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படியுங்கள் : மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

இதனிடையே, நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் உள்பட 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளத்தில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. வளரிளம் பருவ பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதற்கான தேசிய கொள்கையை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தது.

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், " பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. அந்த கொள்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கடந்த நவ.2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Central governmentjayathakurmenstrual hygienenational menstrual hygiene policyNews7Tamilnews7TamilUpdatesSchool GirlsSupreme court
Advertisement
Next Article