Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய பட்ஜெட்டிற்கு கண்டனம்: நாளை மறுநாள் திமுக ஆர்ப்பாட்டம்!

01:10 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய நிதிநிலை அறிக்கை 2024-25-ல் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து  ஜூலை 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

"ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை.

மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கிருஷ்ணகிரியில் நாட்டின் மிகப்பெரிய பேட்டரி ஆலை! ரூ.2000 கோடியில் அமைக்கிறது LOHUM நிறுவனம்!

மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த  பாஜக மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 27ம் தேதி காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் "

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
#NirmalasitaramanBudgetSession2024DMKMKStalinTamilNadu
Advertisement
Next Article